Published : 06 Nov 2019 08:54 AM
Last Updated : 06 Nov 2019 08:54 AM

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ்ராமு தேர்வு

காரைக்குடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டிக்கு காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ்ராமு தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவில் போட்டி

இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் 65-வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களைத் தேர்வு செய்வதற்காக மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் உள்ள வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ்ராமு முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடும் தகுதி பெற்றார்.

தேசிய போட்டிக்கு தகுதி

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள மாணவர் தனுஷ்ராமை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.ராஜேந்திரன், பதிவாளர் குருமல்லேஷ் பிரபு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி இயக்குநர் முத்துக்
கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x