Published : 30 Oct 2019 09:52 AM
Last Updated : 30 Oct 2019 09:52 AM

மரபணு நோய்களை சரி செய்ய புதிய வழிமுறை: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

புதுடெல்லி

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோம் அண்ட் இன்டர்கிரேவிட் பயாலஜி (ஐஜிஐபி) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டெல்லி செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலஜி சென்டர் (சிசிபிஎம்) இணைந்து கடந்த ஏப்ரல் மாதம், மரப்பணு சோதனை ஒன்றை தொடங்கியது.

இந்தியர்களின் மரபணுக்களை வரிசை முறைப்படுத்தும் சோதனையில் நாடு முழுவதும் 1,008 பேரின் மரபணுக்களை 55 வகை மக்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. மரபணுக்களை வரிசை முறை படுத்துவதால் மரபணுவில் டிஎன்ஏ நியூக்ளியோடைடுகளை கண்டுபிடித்து, அதில் உள்ள குறை, நிறைகளை கண்டறிய முடியும்.

சிஎஸ்ஐஆர் இயக்குநர் சேகர் மண்டே கூறியதாவது:

இந்த ஆராய்ச்சி மூலம் இந்திய மக்களின் மரபணுக்கள் பற்றிய துல்லிய தவகல்கள் கிடைத்துள்ளன. இதனால், மக்கள்தொகைக்கு ஏற்பமரபணு வேறுபாட்டை புரிந்துகொள்ள முடிந்தது. மரபணு மாறுபாட்டை அறிந்தால் மருத்துவ பயன்பாடுகளுக்கு மிகவும் உதவும்.
நாட்டில் பல லட்சம் மக்கள் மரபணு வழி நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது செய்த ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மரபணு வழி நோய்களை எளிதில் கண்டுபிடித்து, அதற்கு மருத்துவம் செய்ய முடியும்.

தம்பதிகளுக்கு ஏதேனும் மரபணு குறைபாடு இருந்தால் அதை கண்டறிந்து, அந்த குறைபாடு குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளது.

தற்போது, ​இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரூ.70 லட்சம் செலவாகும். ஆனால், மானிய விலையில் ஒரு லட்சத்துக்குள் கொண்டுவர முடியும். வரும் காலத்தில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த இதைவிடமும் செலவு குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சிஎஸ்ஐஆர் இயக்குநர் சேகர் மண்டே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x