Published : 17 Oct 2019 10:14 AM
Last Updated : 17 Oct 2019 10:14 AM

தண்ணீர் சேமிப்பில் தன்னிறைவு பெற 3 ஆண்டுகளில் நீர் மேலாண்மை கட்டாயம்: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு

புதுடெல்லி

நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் நீர் மேலாண்மையை கட்டாயம் கடைபிடித்து, அடுத்த 3 ஆண்டுகளில் ‘நீர் திறன்’மிக்க பள்ளிகளாக உருவாக வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், ‘‘டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் 2020-ம்ஆண்டுக்குள் அபாயகரமான நிலைக்குசென்று விடும். இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்று கூறியிருந்தது.

இதனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் நீர் மேலாண்மையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ இயக்கு
நரகம் அறிவுறுத்தியுள்ளது.

நீர் மேலாண்மை குறித்து சிபிஎஸ்இநிர்வாகம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, பள்ளிகளில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய்களை அமைக்க வேண்டும். அதேபோல், பழைய நீர் வழிமுறைகளை மாற்றி, தானியங்கி முறையில் அமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்களில் கசிவு இருந்தால், உடனே சரி செய்யவேண்டும் என்பதுபோன்ற வழிமுறைகளை பள்ளிகள் பின்
பற்றவேண்டும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநரக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீர் மேலாண்மையை இனி சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இணைப்பு பள்ளிகளில் நீர் மேலாண்மையை கட்டாயப்படுத்தி, இன்னும் 3 ஆண்டுகளில் தங்களுக்கு தேவையான நீரை தாங்களேசேகரித்துக் கொள்ளும் நீர் திறன்பள்ளியாக மாற்ற உறுதி எடுத்துள்ளோம். நீர் திறன் பள்ளி என்பது, நீர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. தண்ணீரை வீணடிக்கா
மல் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் வழிமுறை. மாணவர்கள் குடிநீர், சமையலறை, லேப், கழிவறை போன்றபல வழிகளுக்கு பள்ளிகளுக்கு நீர் தேவைப்படுகிறது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரையும் இணைந்து ‘பள்ளியின் நீர் மேலாண்மை கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியானது, பள்ளிகளில் நீர் பயன்பாடு, வீணாகும் நீர் குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்த விழிப்புணர்வு செய்யும்.
அதேபோல், பள்ளிகளில் மழைநீர் சேமிப்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x