Published : 16 Oct 2019 09:27 AM
Last Updated : 16 Oct 2019 09:27 AM

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளரானார் சிம்மன்ஸ்

ஆண்டிகுவா

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பில் சிம்மன்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த4 வருடங்களுக்கு அவர் இப்பதவியை வகிப்பார் என்று மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பே அந்த அணியின் பயிற்சியாளராக 2016-ல் பில் சிம்மன்ஸ்இருந்துள்ளார். ஆனால் அப்போது கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார்.

“சரியான பதவிக்கு சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது வழிகாட்டலின் கீழ் மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும்வெற்றிகளைக் குவிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x