Published : 14 Oct 2019 11:07 AM
Last Updated : 14 Oct 2019 11:07 AM

ஒருநாள் பிரிட்டன் துணை உயர் ஆணையரான சென்னை மாணவி

City student plays British Deputy High Commissioner for a day

Chennai

A student of the School of Excellence in Law, Deepa led the British Deputy High Commission the entire day, and took over the role of Oliver Ballhatchet, the British Deputy High Commissioner last week. Deepa Jayaraj, a 20-year-old law student.
The young student was one of the seven winners chosen from across the country, as part of a contest where women aged between 18 and 23 were asked to submit a video presentation on “What does gender equality mean to you and who is your biggest inspiration.”
‘First woman’
The contest was held to mark the International Day of the Girl Child.
In her video, Deepa stressed on the role education played towards ensuring gender equity. Mr. Ballhatchet said Deepa was the “first woman Deputy High Commissioner in Chennai” after 26 men serving the post here since 1947.
Deepa’s day began with a breakfast meeting at Cottingley, the residence of the British Deputy High Commissioner. “I had an opportunity to meet with the heads of sections here and was given a briefing about the work they do,” she said.

- The Hindu

மொழிபெயர்ப்பு

ஒருநாள் பிரிட்டன் துணை உயர் ஆணையரான சென்னை மாணவி

சென்னை

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணை உயர் ஆணையத்துக்கு ஒரு நாள் தலைவராக செயல்படும் அதிகாரத்தை சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி தீபா ஜெயராஜ் கடந்த வாரம் பெற்றார். தீபாவுக்கு 20 வயது. சென்னையில் உள்ள ’ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா’ நிறுவனத்தில் சட்டம் படித்து வருகிறார். பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹச்செட்டின் பதவியை ஒரு நாள் இவர் வகித்தார்.

“உங்களைப் பொறுத்தவரைப் பாலினம் என்பது என்ன? மற்றும் உங்களுடைய முன்மாதிரி யார்?” என்ற தலைப்பில் ஒரு காணொலி போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் அனைத்திந்திய அளவில் 18-லிருந்து 23 வரையிலான வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்களில் வெற்றி பெற்ற ஏழு பேரில் ஒருவர் தீபா ஜெயராஜ்.

சர்வதே பெண் குழந்தை நாளை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. தன்னுடைய காணொலியில், பாலின சமத்துவத்தில் கல்விக்கான இடத்தை விளக்கி தீபா பேசியிருந்தார். ‘‘சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணை உயர் ஆணையத்துக்கு தலைவராக ஒரு பெண் பதவி வகிப்பது இதுவே முதல்முறை” என்று தீபாவை பாராட்டினார் ஆலிவர் பால்ஹச்செட்.

1947-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 26 ஆண்கள் இந்த சிறப்பு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரின் வீட்டில் காலை சிற்றுண்டியுடன் தீபாவின் தினம் தொடங்கியது. ‘‘பிரிட்டிஷ் ஆணையத்தில் உள்ள தலைமை பிரிவுகளையெல்லாம் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய பணி குறித்து எனக்குச் சுருக்கமாக விளக்கப்பட்டது” என்றார் தீபா.

- தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x