Published : 11 Oct 2019 11:25 AM
Last Updated : 11 Oct 2019 11:25 AM

டென்னிஸ்: ஜோகோவிச் முன்னேற்றம்

ஷாங்காய்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி, ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நொவாக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஜான் இஸ்னெரை எதிர்த்து ஆடினார்.

இப்போட்டியில் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இப்போட்டித் தொடரின் கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x