Published : 10 Oct 2019 10:52 AM
Last Updated : 10 Oct 2019 10:52 AM

ரூ.6000 நிதி பெற விவசாயிகளுக்கு கால அவகாசம்: நவ.30 வரை நீட்டிப்பு

புதுடெல்லி

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்காக காலக்கெடுவை மத்திய அரசு நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கெடுவை நவம்பர் 30 வரை நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ராபி விதைப்பு பருவத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இந்தக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x