Last Updated : 08 Oct, 2019 04:34 PM

 

Published : 08 Oct 2019 04:34 PM
Last Updated : 08 Oct 2019 04:34 PM

ஆங்கில உரையாடல்- அதிலென்ன தவறுகள்? - 1

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

கண்ணனும், முத்துசாமியும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களது உரையாடலின் ஒரு பகுதி இது.
கண்ணன் - How is your school? Are you happy their?
முத்துசாமி - I am very happy. My friends are also happy. Everybody in this school are happy.
கண்ணன் - Very nice to hear that.
முத்துசாமி - How are the teachers?
கண்ணன் - They teach well. All of us understand lessons.
முத்துசாமி - Is your school not working on this Monday?
கண்ணன் - Yes. According to our school calender it is a holiday.


மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
Their என்பதற்கும், there என்பதற்கும் வேறுபாடு உண்டு. Their என்றால் அவர்களுடைய என்று பொருள். It is their house என்றால் அது அவர்களுடைய வீடு என்று பொருள்.
There என்றால் அங்கே என்று அர்த்தம் (இதற்கு எதிர்ச்சொல் here – இங்கே). We are coming there என்றால் நாங்கள் அங்கே வந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். எனவே கண்ணன் கூறிய வாக்கியம் “Are you happy there?” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
முத்துசாமி Everybody in this school are happy என்கிறான். Everybody என்பது பலரையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. ஆனால், everybody, somebody போன்ற வார்த்தைகள் ஒருமையாகத்தான் கருதப்படுகின்றன. எனவே Everybody are happy என்பது தவறு. Everybody is happy என்பதுதான் சரி.
Is your school not working என்பதைவிட not functioning என்பது மேலும் பொருத்தமாக இருக்கும்.
காலண்டர் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது calender என்றுதான் பலரும் எழுதுகிறார்கள். ஆனால், இதை calendar என்றுதான் ​எழுத வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x