Published : 18 Jul 2023 04:00 AM
Last Updated : 18 Jul 2023 04:00 AM

இன்று என்ன? - கருப்பின மக்களின் தலைவர்

நிறவெறிக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் 1918 ஜூலை 18-ம் தேதி பிறந்தார். குடும்பத்தில் முதன் முதலில் பள்ளி சென்றவர். லண்டன், தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பையும், சட்டக் கல்வியும் பயின்றார். கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார்.

1962-ல் கைது செய்யப்பட்டு 46 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார். ‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்ற அரசின் நிபந்தனையை நிராகரித்தார். 71 வயதில் விடுதலை செய்யப்பட்டார். 1994-ல் நாடு விடுதலை அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்.

இனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்தை போற்றி இந்திய அரசு 1990-ல் பாரத ரத்னா விருது வழங்கியது. 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அவருக்கு 2007-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது. 2013-ல் அவர் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x