‘விசிட் மலேசியா 2026’ திட்​டம் அடுத்த ஆண்டு வரை நீட்​டிப்பு: இந்திய பயணி​களை ஈர்க்க வியூகம்

‘விசிட் மலேசியா 2026’ திட்​டம் அடுத்த ஆண்டு வரை நீட்​டிப்பு: இந்திய பயணி​களை ஈர்க்க வியூகம்
Updated on
1 min read

சென்னை: மலேசிய அரசின் ‘விசிட் மலேசியா 2026’ சிறப்​புச் சுற்றுலாத் திட்​டத்​தின் காலக்​கெடு 2027-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்​பட்​டுள்​ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதி​கரிக்​கும் நோக்​கில், மலேசிய சுற்​றுலாத் துறை பல்​வேறு விளம்​பரப் பணி​களை முன்​னெடுத்​துள்​ளது.

இதுகுறித்து மலேசிய சுற்​றுலாத் துறை​யின் தலைமை இயக்​குநர் அமிருள் ரிசால் அப்​துல் ரஹீம் கூறிய​தாவது: மலேசிய சுற்​றுலாத் துறை​யின் முக்​கிய அங்​க​மாக இந்​தியா உள்​ளது. சிங்​கப்​பூர், தாய்லாந்​து, இந்​தோ​னேசியா மற்​றும் சீனா ஆகிய நாடு​களுக்கு அடுத்​த​படி​யாக, மலேசி​யா​வின் முதல் 5 முக்​கியச் சுற்​றுலாச் சந்தைகளின் பட்​டியலில் இந்​தி​யா​வும் இடம் பிடித்​துள்​ளது.

கடந்த 2023 டிசம்​பர் முதல் இந்​தி​யர்​களுக்கு விசா இன்றி பயணிக்கும் சலுகை வழங்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, 2025-ல் 15 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் மலேசி​யா​வுக்​குப் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர். சர்​வ​தேச பயணக் கொள்​கை​களில் மாற்றங்​கள் நில​வி​னாலும், இந்​தி​யச் சந்​தை​யுட​னான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்​த​வும், இரு​நாட்டு சுற்​றுலா துறை கூட்டாண்​மையை விரிவு படுத்​த​வும் தீவிர நடவடிக்​கைகள் எடுக்கப்​பட்டு வரு​கின்​றன.

அதன் ஒருபகு​தி​யாக, ‘சேல்ஸ் மிஷன் சீரிஸ் - 2’ என்ற வர்த்தக மேம்​பாட்டு நிகழ்வு சென்​னை, மும்​பை, டெல்லி ஆகிய நகரங்களில் 20-ம் தேதி வரை நடத்​தப்​படுகிறது. இதில் மலேசி​ய உணவகங்​கள், சுற்றுலா அமைப்​பு​கள் உட்பட 47 நிறு​வனங்​கள் கலந்​து​கொள்​கின்​றன. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

‘விசிட் மலேசியா 2026’ திட்​டம் அடுத்த ஆண்டு வரை நீட்​டிப்பு: இந்திய பயணி​களை ஈர்க்க வியூகம்
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in