உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மீட்புப் பணிகள் தீவிரம்
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

தேவ்பிரயாக்: உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட் - பிப்பல்கோட்டி நீர்மின் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் நேற்று மாலை (ஆக.13) திடீரென பெருமளவு தண்ணீரும், இடிபாடுகளும் நுழைந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாமோலியின் பிப்பல்கோட்டி பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், சுரங்கத்துக்குள் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.

நீருக்கடியில் செல்லும் சாதனங்களுடன் சுரங்கத்துக்குள் சென்று மீட்புப் பணியை தீவிரப்படுத்திய அவர்கள், இதுவரை 19 பேரை மீட்டு கோபேஷ்வர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் 7 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

விபத்து நடந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 தொழிலாளர்கள் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆபத்தான நிலையில் இருந்த ஒரு தொழிலாளி மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவம் குறித்துத் கவலை தெரிவித்துள்ள உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை முழுவீச்சில் முடுக்கவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
“நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராததற்கு காரணம் இதுதான்...” - ராகுல் காந்தி ‘விமர்சன’ விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in