மண் சரிவு, கனமழை காரணமாக வெறிச்சோடிய கொடைக்கானல்: உள்ளூர் வியாபாரிகள் வேதனை

மண் சரிவு, கனமழை காரணமாக வெறிச்சோடிய கொடைக்கானல்: உள்ளூர் வியாபாரிகள் வேதனை
Updated on: 
1 min read

கொடைக்கானல்: கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி கொடைக்கானல் வெறிச்சோடியதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில், பல இடங்களில் மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது நிலைமை சீரானதும் மூடப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

வத்தலக்குண்டு, பழநி சாலை வழியாக கொடைக்கானலுக்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும், மண் சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் போனால் பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள் என்பது போன்ற தவறான தகவல்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக, கொடைக்கானலில் இயல்பு நிலை திரும்பிய பிறகும் கூட சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வரும் சாலையோர வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான வதந்திகளை சுற்றுலாப் பயணிகள் நம்பி ஏமாற வேண்டாம். சுற்றுலாப் பயணிகளுக்காக கொடைக்கானலும், சிறு வியாபாரிகளும் காத்திருக்கிறோம். எனவே, சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வாருங்கள் என வியாபாரிகள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.

மண் சரிவு, கனமழை காரணமாக வெறிச்சோடிய கொடைக்கானல்: உள்ளூர் வியாபாரிகள் வேதனை
சென்னையில் மின்பழுது காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in