கொடைக்கானல்: ஜன.12 முதல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே வசூல்!

குணா குகை

குணா குகை

Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல நாளை (ஜன.12) முதல் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக மட்டுமே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கும் அந்தந்த இடத்தில் தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில் , அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை (ஜன.12) முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, நுழைவு கட்டணம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக மட்டுமே வசூலிக்கப்படும். நேரிடையாக பணமாக வசூலிக்கப்பட மாட்டாது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>குணா குகை</p></div>
திருமாவும் ராமதாஸும் திரும்பவும் கைகோப்பார்களா? - சமாதானப் படலத்தில் இறங்கியது திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in