திருமாவும் ராமதாஸும் திரும்பவும் கைகோப்பார்களா? - சமாதானப் படலத்தில் இறங்கியது திமுக

திருமாவும் ராமதாஸும் திரும்பவும் கைகோப்பார்களா? - சமாதானப் படலத்தில் இறங்கியது திமுக
Updated on
1 min read

அ​தி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இடம்​பிடித்​து​விட்​ட​தால் ராம​தாஸ் திமுக-வுடன் கூட்​டணி பேச்​சு​வார்த்​தையை தொடங்கி இருக்​கி​றார். இதனால் விசிக முறைத்​துக் கொள்​ளாமல் இருக்க அந்​தக் கட்​சி​யை​யும் சமா​தானம் செய்​யும் வேலை​கள் நடப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

பாமக நிறு​வனர் ராம​தாஸுக்​கும் தலை​வர் அன்​புமணிக்​கும் இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யினரும் இரண்டு பிரி​வாகி நிற்​கி​றார்​கள். குடும்​பத்​தினர், கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், மாற்று கட்​சித் தலை​வர்​கள் என பலதரப்​பும் இரு​வரிட​மும் நடத்​திய பேச்​சு​வார்த்​தைகளுக்கு பலனேதும் கிடைக்​காத​தால் தந்​தை​யும் மகனும் இணைந்து செயல்​படு​வதற்​கான வாய்ப்பே இல்லை என்​கிற நிலை உரு​வாகி​யுள்​ளது.

பாமக​வில் உள்ள 5 எம்​எல்​ஏ-க்​களில் ஜி.கே.மணி​யும் இரா.அருளும் ராம​தாஸுக்கு ஆதர​வாக​வும், எஸ்​.பி.வெங்​கடேஸ்​வரன், எஸ்​.ச​தாசிவம், சி.சிவக்​கு​மார் ஆகி​யோர் அன்​புமணிக்கு ஆதர​வாக​வும் நிற்​கி​றார்​கள். கட்​சி​யில் இருந்து அன்​புமணி​யின் ஆதர​வாளர்​களை ராம​தாஸ் நீக்​கு​வதும், ராம​தாஸ் ஆதர​வாளர்​களை அன்​புமணி நீக்​கு​வதும் தொடர்ந்து நடை​பெறுகிறது.

இதற்​கிடை​யில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலை​வ​ராக அன்​புமணியே இருப்​பார் என்று தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. மாம்​பழம் சின்​னத்​தை​யும் அன்​புமணி தரப்​புக்கே ஒதுக்​கி​யுள்​ளது. இதை ஆட்​சேபித்​துள்ள ராம​தாஸ், அன்​புமணி முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யத்​தி​லும் காவல் துறை​யிலும் புகார் அளித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், திடீரென அண்​மை​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்த அன்​புமணி, கூட்​ட​ணியை உறுதி செய்​தார். அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக-வுக்கு 18 தொகு​தி​கள் மற்​றும் ஒரு ராஜ்ய சபா சீட் தரு​வதற்கு அதி​முக ஒப்​புக் கொண்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதையடுத்​து, ராம​தாஸ் தரப்பு திமுக-​விடம் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

ஆனால், ராம​தாஸை திமுக கூட்​ட​ணி​யில் சேர்த்​தால், கூட்​ட​ணியை விட்டு வெளி​யேறு முடி​வில் இருக்​கிறது விசிக. இதனால் ராம​தாஸை திமுக கூட்​ட​ணி​யில் சேர்க்​க​வும், விசிக-வை கூட்​ட​ணி​யில் தக்க வைக்​க​வும் வடமாவட்ட மூத்த அமைச்​சர் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளார். அதேசம​யம் 10 தொகு​தி​களுக்கு மேல் ராம​தாஸ் கேட்​ப​தால் கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யில் இழுபறி நீடிப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இதுதொடர்​பாக ராம​தாஸ் தரப்​பினரிடம் கேட்ட போது, “பாமக-​வின் ஆணிவே​ரான வன்​னியர் சங்​கம் முழு​வதும் ராம​தாஸ் கட்​டுப்​பாட்​டில் தான் உள்​ளது. அதனால், இந்த தேர்​தலில் ராம​தாஸ் யார் என்​பதை மகன் அன்​புமணிக்கு நன்கு புரிய​வைப்​பார். அதி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இருப்​ப​தால், அங்கு செல்ல வாய்ப்பு இல்​லை.

திமுக-​வா, தவெக-வா என நிர்​வாகி​களிடம் கருத்​துக் கேட்​ட​போது பெரும்​பாலான​வர்​கள் திமுக கூட்​ட​ணிக்​குச் சென்​றால் வெற்றி வாய்ப்பு அதி​கம் என்று தெரி​வித்​தனர். அதனால், திமுக-வுடன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. எத்​தனை தொகு​தி​கள் என்​பது இன்​னும் உறு​தி​யாக​வில்​லை. ரா​ம​தாஸ் மகளும், கட்​சி​யின் செயல் தலை​வ​ரு​மான காந்​தி, ஜி.கே.மணி. இரா.அருள், திருக்​கச்​சூர்​ ஆறு​முகம்​ உள்​ளிட்​டோர்​ தேர்​தலில்​ போட்​டி​யிட​வுள்​ளனர்​” என்​றனர்​.

திருமாவும் ராமதாஸும் திரும்பவும் கைகோப்பார்களா? - சமாதானப் படலத்தில் இறங்கியது திமுக
மனமாற்றத்தை ஏற்படுத்திய தேமுதிக மாநாடும், துணை முதல்வர் கோரிக்கையும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in