ஐஆர்சிடிசி சார்பில் விமானம் மூலம் சிம்லா, குலு மணாலி சுற்றுலா செல்ல முன்பதிவு தொடக்கம்

ஐஆர்சிடிசி சார்பில் விமானம் மூலம் சிம்லா, குலு மணாலி சுற்றுலா செல்ல முன்பதிவு தொடக்கம்
Updated on
1 min read

கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரயில், விமானம் மூலம் பல்வேறு சுற்றுலாக்களை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், மே 13-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் இமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லா, குலு மணாலி, சண்டிகர் போன்ற இடங்களை காண 8 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.50,550 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விமான கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்குமிடம், ஏசி போக்குவரத்து, காலை, இரவு உணவு, ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளை பெறலாம். இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9003140655, 8287932064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in