Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

திருநாவலூர் அருகே - முதியவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை :

உளுந்தூர் பேட்டை அருகே முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி மாரிமுத்து கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி உயிரிழந்தார். அவரது ஈமச்சடங்கில் பங்கேற்க ராமலிங்கத்தின் மருமகள் காளியம்மாள் வந்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதில் கொரட்டூரைச் சேர்ந்த காசி(60) என்பவர் காளிம்மாளுக்கு ஆதரவாக தகராறு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராமலிங் கத்தின் உறவினர்களான பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பக்கிரி(60), பாவாடை(57), கஜேந்திரன்(52), மற்றொரு உறவினரான குபேந்திரன்(35 )ஆகியோர் காசியை தட்டிகேட்டுள்ளனர். இதில், வாக்குவாதம் அதிகரித்ததில், காசி தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த காசி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காசி உயிரிழந்தார்.

இதுகுறித்து அரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து பக்கிரி, பாவாடை, கஜேந்திரன் ,குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், பக்கிரி, பாவாடை, கஜேந்திரன் , குபேந்திரன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x