Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்னாங்கி சேவை :

கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரம்  தாத தேசிகன் சாற்று முறைஉற்சவத்தையொட்டி ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ரத்ன அங்கி உடுத்தி பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு ரத்னஅங்கி அணிவிக்கப்பட்டு தேவி,பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலின் உள் பிரகாரத்திலும் வலம் வந்தார். பெருந்தேவி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் உடன் அழைத்து வரப்பட்டார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x