Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

காசி பல்கலை.யுடன் தஞ்சை தமிழ் பல்கலை. ஒப்பந்தம்: அமைச்சரிடம் பாஜக வலியுறுத்தல் :

பாஜக மாநில செயலாளர் ஆர்.னிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து பேசினேன். அப்போது பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அவரது பெயரில் காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி, தமிழுக்காக ஓர் இருக்கை அமைத்துள்ளார்.

காசி பல்கலை.யுடன் தஞ்சாவூர் தமிழ் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். இக்கோரிக்கையைப் பரி சீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x