Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

சிவன்மலையில் முகூர்த்தக்கால் நடும் பூஜை :

காங்கயம்: தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் படிக்க, முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு மலையில் இருந்து படி வழியாக முகூர்த்தக்கால் கொண்டுவரப்பட்டு, அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, தேரின் நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூலவரிடம் வைக்கப்பட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x