Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் : பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

இந்திய அரசியலமைப்பு தினம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங் கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் நாளாக அரசிய லமைப்பு தினம்உள்ளது. இன்றைய நாள் நாடாளுமன்றத்தை வணங்க வேண்டிய நாள். இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். 1950-க்கு பிறகு அரசியல் சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை.

நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். பாபா சாகேப் அம்பேத்கர் நாட் டுக்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள்.

நமது நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. வாரிசு அரசியல் நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்துக்காக மட்டுமே செயல் படுகின்றன. கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனு பவிக்கக் கூடாது.

உட்கட்சி ஜனநாயகத்தை, மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜன நாயகத்தை எப்படி பாதுகாக்கும். திறமைகள் அடிப்படையில் தலை வர்கள் தேர்வு செய்யப்பட வேண் டும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது மதிப்பீடுகளை இழந்துவிட்டன.

அரசியல் கட்சிகள் அரசிய லமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் செய்து சிறை தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது. ஊழல் செய்த பின்னரும் பொதுவாழ்வுக்கு வருபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இன்று மக்கள் தங்களது உரிமைகளை பற்றி பேசுகின்றனர். மக்கள் தங்களது கடமைகளை புரிந்து கொண்டால், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும். நமது அரசியலமைப்பை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாட்டு மக்களுக்கு வாழ்த்து

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அரசிய லமைப்பு சட்ட தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் ஆன்மா நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளியாக அமைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x