Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

வளையலணி விழாவில் கத்திக்குத்து :

விருத்தாசலம் அருகே வளையலணி விழாவில் இளைஞரைகொல்ல முயற்சித்தவரை போலீஸார் கைது செய்துள் ளனர்.

நெய்வேலி பழையபாப்பன் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன், அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கவுசிகா என்பவரை 10 மாதங்களுக்கு முன் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறிதிருமணம் செய்து கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்தனர்.

சிறிது நாட்களுக்குப் பின் இருவரும் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகர் பகுதி யில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இதனிடையே கவுசிகா கர்ப்பமானதால் அவருக்கு வளையலணி விழா நடத்தஅழைப்பிதழ் அச்சடித்த கர்ணன், தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர் களை அழைத்துள்ளார்.

அதன்படி நேற்று விருத்தாசலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கவுசிகாவிற்கு வளையலணி விழா நடைபெற்றது. அப்போது கவுசிகாவின் சகோதரர் வினோத் என்பவர், விழா நடைபெற்ற இடத்திற்குச் சென்று, வளையலணி அழைப்பிதழில் தனது பெற்றோரின் பெயரை எப்படி அச்சடிக் கலாம் எனக் கூறி கவுசிகா மற்றும் அவரது கணவர் கர்ணன் ஆகியோரிடம் தகரா றில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிலம்பரசன் என்பவர் தகராறை விலக்கச்சென்றபோது, வினோத் கத்தியால் சிலம்பரசனை குத்தியுள்ளார்.

அருகிலிருந்தவர்கள், சிலம்பரசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் விருத்தாசலம் காவல் துறைக்கு தகவல் அளித்து வினோத்தை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வினோத்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x