Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

குமரியில் வியாபாரிகள் எதிர்ப்பால் : சீஸன் கடை அமைக்கும் பணி நிறுத்தம் :

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சபரிமலை சீஸனை முன்னிட்டு பேரூராட்சி மற்றும் பகவதியம்மன் திருக் கோயில் இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். கரோனா ஊரடங்கால் கடந்தஆண்டு சீஸன் கடைகள் அமைக்கப்படவில்லை. இந்த ஆண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக் கப்பட்டு வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீஸன் கடைகள் ஏதும் அமைக்கப்பட வில்லை. மாவட்ட நிர்வாகம் சீஸன் கடைகளுக்கான அனுமதி எதுவும் வழங்கவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலின் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான முக்கடல் சங்கமம் பகுதியில் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் 48 நடைபாதை சீஸன் கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு பிற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதை யடுத்து சீஸன் கடைகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x