Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

பாஜக நிர்வாகி மனைவி, தாயாரிடம் 23 பவுன் கொள்ளை :

மதுரை திருமங்கலம் முத்தையா நகரைச் சேர்ந்தவர் விஜேந்திரன் (37). பாஜக இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் 4 பேர் திடீரென நுழைந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி விஜேந்திரனின் மனைவி, தாயாரை மிரட்டியுள்ளனர்.

மேலும் இருவரும் அணிந் திருந்த 23 பவுன் நகை, மற்றும் பீரோவில் இருந்த ரூ. 1.25 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்து வீட்டுக்குத் திரும்பிய விஜேந்திரன், திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x