Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

திருவான்மியூர் காட்டன் ஹவுஸில் - தீபாவளிக்கு வந்துள்ள புதிய ஜவுளிகள் :

தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவான்மியூர் காட்டன் ஹவுஸில் புதுப்புது ஆடைகள், புத்தம்புது டிசைன்களில் அனைவருக்கும் ஏற்ற விலையில் கிடைக்கிறது.

இதுகுறித்து காட்டன் ஹவுஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருவான்மியூர் சிக்னல் அருகே ஈசிஆர்-ஓஎம்ஆர் சாலைகள் இணையும் பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது காட்டன் ஹவுஸ் துணிக்கடை. தற்போது பண்டிகைக் கொண்டாட்ட மனநிலைக்கு மக்கள் அனைவரும் திரும்பியுள்ளனர். வாடிக்கையாளர்களின் மன நிலைக்கு ஏற்ப ஏராளமான புதிய ஜவுளி ரகங்களை காட்டன் ஹவுஸ் இறக்கியுள்ளது.

இந்தோ வெஸ்டர்ன் பாவாடை, தென்னிந்திய கலாச்சார வடிவமைப்பு கலந்த லெஹங்கா, தரையை தொடும் ஃபிராக் வகைகள், ஆண்களுக்கு ஸ்டிரெயிட் பேன்ட், மெச்சிங் வேட்டிகள் ஆகியவை வந்துள்ளன. ரெடிமேட் ஜாக்கெட்களுக்காக தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 5 எக்ஸ்எல் அளவு வரையிலான ஆடைகளும் இங்கு கிடைக்கும். மேலும் மணமகள் ஆடைகள், திருமண பட்டுப்புடவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவையும் உண்டு.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்ற தீபாவளி சிறப்பு குர்திகள் வந்துள்ளன. பட்டுப் புடவை போலவே இருக்கும் விலை குறைந்த புடவைகளும் இங்கு கிடைக்கும். காஞ்சிபுரம் புடவைகள், பனாரஸ் புடவைகள், டெம்பிள் பார்டருடன் கூடிய டுஸ்ஸர் சில்க் புடவைகள், சல்வார் கமீஸ், ஸ்கிர்ட் போன்றவையும் உள்ளன. குழந்தைகளுக்கான கண்கவரும் ஆடை ரகங்களும் ஏராளமாக வந்துள்ளன.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x