Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

டிப்ளமோ சிவில் இன்ஜினீயர்களுக்கு நிலஅளவை பயிற்சி :

நில அளவை, நிலவரி திட்டத் துறை சார்பில் டிப்ளமோ சிவில் இன்ஜினீயர்களுக்கு 3 மாத கால நில அளவை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு நவ.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரி திட்டத் துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில தொழில்நுட்பக் கல்விஇயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகால டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் தேர்ச்சிபெற்றவர்களிடமிருந்து நில அளவை செய்வதற்கு உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தபயிற்சி 3 மாதம் நடைபெறும். இதுதொடர்பான முழு விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x