Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சகோதரரால் தர்மசங்கடம் ஏற்படும்.ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக் குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப் பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணம் உண்டு.கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் பதற்றம் ஏற்படும்.துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும். வாகனம் செலவு வைக்கும்.விருச்சிகம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும்.கும்பம்: சகோதரர் வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x