Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

மூன்று வீடுகளில் 46 பவுன் நகை திருட்டு :

கோவை

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில், 46 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுக்கரை, குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி(50). ஓட்டுநரான இவர், கடந்த 14-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், மதுக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செல்வபுரம் அருள் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன்(64). நகைப்பட்டறை தொழிலாளி. இவர், கடந்த 13-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ஒன்பதரை பவுன் நகை, 500 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், செல்வபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

சுந்தராபுரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி கவுரி(73). இவர், குனியமுத்தூர் போலீஸில் அளித்த புகாரில்,‘‘எனக்கு சொந்தமான 30 பவுன் நகையை, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தேன்.

கடந்த 13-ம் தேதி பார்த்த போது, நகையை காணவில்லை. மர்மநபர்கள் திருடிவிட்டனர்’’ எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x