Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

தமிழகத்தின் பல மாவட்டங்களில் - 3 நாட்கள் கனமழை வாய்ப்பு :

தென்மேற்கு பருவக் காற்று,வெப்பச்சலனம் காரணமாக இன்று வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

10-ம் தேதி நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழையும், வடமாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமானமழையும் பெய்யக் கூடும்.

11-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

12-ம் தேதி நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமானமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவிய ரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x