Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் - ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 363 பேர் வெற்றி :

சென்னை

மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 761 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் அகிலஇந்திய அளவில் ஷங்கர் ஐஏஎஸ்அகாடமியில் பயின்ற 363 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 6 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர், இவர்களில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஜக்ரதி அவஸ்தி 2-ம் இடம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில் முதல் 100 இடங்களில் 60 மாணவர்கள் ஷங்கர்ஐஏஎஸ் அகாடமியின் சென்னை,பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி என பல்வேறு மையங்களில் பயிற்சி பெற்றவர்கள்.

அதில் கோவையை சேர்ந்தவி.எஸ்.நாராயணசர்மா தமிழகத்தில் முதல் இடத்தையும் அகில இந்திய அளவில் 33-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 100-ம் இடம்பிடித்த பாண்டிச்சேரி பிரசன்ன குமார், 41-வது இடம் பிடித்த அஸ்வதி ஜீஜி, 108-ம் இடம் பிடித்த தென்காசி சண்முகவல்லி ஆகியோர் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில்முழு நேர பயிற்சி பெற்றவர்கள்.

கோவையை சேர்ந்த ரஞ்சித்என்ற மாற்றுத் திறன் மாணவர்முதன்மைத் தேர்வு, நேர்காணலை தமிழ் வழியில் எழுதி, தேசிய அளவில் 750-ம் இடம் பிடித்துள்ளார். இவரும் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x