Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

கோவை-ஜபல்பூர் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு :

கோவை

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பயணிகளின் தேவை கருதியும், அதிகப்படியான பயணிகள் முன்பதிவு செய்து சவுகரியமாக பயணிக்கும் வகையிலும் கோவை-ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயிலில் படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. இந்த ரயில் பாலக்காடு, மங்களூரு வழியாக செல்லும். ஜபல்பூர்-கோவை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02198), கோவை-ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயிலில் (எண்:02197) இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x