Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

சிவன்மலை கோயில் ஊழியர்களுக்கு பரிசோதனை :

காங்கயம்: சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக,கோயில் நிர்வாகம் சார்பில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து,கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் 15 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காங்கயம் பகுதிகளில் 260 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x