Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

பள்ளிக்கல்வி இயக்குநர்கள்26 பேர் இடமாற்றம் :

சென்னை

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநராகவும், வயது வந்தோர் கல்விஇயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநராகவும், தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக இருந்த எஸ்.சேதுராமவர்மா தேர்வுத் துறை இயக்குநராகவும், பாடநூல் கழக செயலராக இருந்த எஸ்.நாகராஜ முருகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநராகவும் மாற்றப்படுகின்றனர்.

தேர்வுத் துறை இயக்குநராக இருந்த சி.உஷாராணி, தேர்வு வாரிய உறுப்பினராகவும், கூடுதல் திட்ட இயக்குநர் பெ.குப்புசாமி, வயது வந்தோர் கல்வித் துறை இயக்குநராகவும், தொடக்கக் கல்வி இயக்குநர் மு.பழனிச்சாமி, தேர்வு வாரிய உறுப்பினர்செயலராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ச.கண்ணப்பன் பாடநூல்கழக செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக பொது நூலகத் துறை இயக்குநர் பணி வழங்கப்படுகிறது. 18 இணை இயக்குநர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலர்காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x