Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

காணாமல்போன மதுரை ஷாப்பிக் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் - புதிய பஸ் நிலையத்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் :

மதுரை புதிய பெரியார் பஸ்நிலையப் பகுதியில் இருந்த ‘காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தை தடமே தெரியாமல் முற்றிலும் வணிக வளாகமாக மாற்றியதால் கூடுதலாக 1,100 பஸ்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக வாகனப் போக்கு வரத்தும், மக்கள் நெருக்கமும் மிகுந்த நகரங்களில் மதுரையும் ஒன்று. பிற நகரங் களைக் காட்டிலும்

மதுரையில் அதிக எண்ணிக்கையில் மாநகர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 900 மாநகர பஸ்கள், 4,500 டிரிப் இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரையில் மட்டுமே நகர் போக்குவரத்தில் இதுவரை தனியாருக்கு அனுமதி வழங்கவில்லை.

அதனால், முழுக்க முழுக்க மாநகர அரசு பஸ்கள் இயக்கத்துக்காக மட்டுமே மதுரையில் காம்ப்ளக்ஸ், பெரியார், அண்ணா ஆகிய மூன்று பஸ்நிலையங்கள் செயல்பட்டன. இதில், காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் இருந்து 1,600 டிரிப்புகளும், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 2,900 டிரிப்புகளும் இயக்கப்பட்டன.

காம்ப்ளக்ஸ் பஸ்நிலையத்தில் இருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம், நிலையூர், திருநகர், திருப்புவனம் மார்க்கமாக செல் லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர, இரவில் ஆம்னி பஸ்களும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டன.

காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வந்தனர். 1970-களில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பஸ்கள் மட்டுமில்லாது, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர் மொபசல் பஸ்களும் இயக்கப்பட்டன. அதன் பின்னரே அண்ணா, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையங்கள் புறநகர் பஸ்களுக்காக தொடங்கப்பட்டன.

பெரியார், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையங் களை இடித்து விட்டு அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ்நிலையம் போல் ரூ.167 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி தொடங்கி யது. மெஜஸ்டிக் பஸ்நிலையம் போல் அமைந்தால் கூடுதலாக வணிக வளாகங்கள் கட்ட முடியாது என்ற வணிக நோக்கில் சாதாரண பஸ்நிலையமாக கட்டப்பட்டது.

இதில், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் இருந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்காக வணிக வளாகம் கட்டப்படுகின்றன. அதனால், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் இருந்த இடம் தெரியாமலே காணாமல் போய்விட்டது. பெரியார் பஸ்நிலையம் இருந்த இடத் திலாவது முழுமையாக பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் வகையில் விரிவாகக் கட்டியிருக்கலாம். 900 பஸ்கள் வந்து செல்லக்கூடிய பஸ்நிலையத்தில் வெறும் 57 பஸ்களை மட்டுமே நிறுத்தும் அளவு க்கு புதிய பெரியார் பஸ்நிலையம் கட்டப் பட்டுள்ளது.

அதனால், பெரியார் பஸ்நிலையம் செயல்படத் தொடங்கினால் அப்பகுதியில் வழக்கத்தைவிட இன்னும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரின் போக்குவரத்து இடியாப்பச் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் இதுவரை செயல்பட்டு வந்த திருப்புவனம், திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் மார்க்கத்தில் சென்ற பஸ்களை எங்கிருந்து இயக்குவது என்று தெரியாமல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் குழப் பத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x