Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.ரிஷபம்: உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். பிற்பகல் முதல் தொட்ட காரியங்கள் துலங்கும். கலைப்பொருட்கள் சேரும்.மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.கடகம்: தொட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.சிம்மம்: நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர் பயணம் ஏற்படும்.கன்னி: பால்ய நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.துலாம்: உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக் கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி நின்ற உறவினர், நண்பர்கள் விரும்பி வருவார்கள்.தனுசு: மனைவிவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.மகரம்: குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் அலைச்சல் உண்டு. பணப்பற்றாக்குறை ஏற்படும்.கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.மீனம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x