Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

அண்ணா பல்கலை. : ஆட்சிமன்றக் குழுவில் உதயநிதி நியமனம் :

சென்னை

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேரவை தலைவர் அப்பாவு, பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தேர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக உதயநிதி ஸ்டாலின், சிந்தனைச் செல்வன் ஆகியோரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x