Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - 265 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 265 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப் பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட் டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,125 பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நேரடி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் இறுதி யில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஆலங்காயம் ஒன்றியத்தில் 94,311 வாக்காளர் களும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 250 வாக்காளர்களும், கந்திலி ஒன்றியத் தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 226 வாக்காளர்களும், மாதனூர் ஒன்றி யத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 505 வாக்காளர்களும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 76 ஆயிரத்து 913 வாக்காளர்களும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 903 வாக்காளர்களும் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,164 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர் தலில் பதிவாகும் வாக்குகள் 6 ஒன்றியங்களில் எண்ணப்பட உள்ளன. திருப்பத்தூர் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் குரிசிலாப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியிலும், கந்திலி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் கெஜல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் ஜோலர்பேட்டை அரசு பல்வகை தொழில் நுட்பக்கல்லூரியிலும், மாதனூர் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் ஆணைக்கார் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி யிலும், ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் ஆலங்காயம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படவுள்ளன.

மாவட்டத்தில், பதற்றமான வாக்குச் சாவடி மையங்கள் யாவை? அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் துறையினர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 135 இடங்களில் 265 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அதற்கான அறிக்கையை ஆட்சியரிடம் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத் துதல், காவல் துறை பாதுகாப்பு, வாக்காளர்களின் அச்சத்தை தீர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அங்கு மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x