Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

தமிழகத்தில் புதிதாக 1,544 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 1,544 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்877, பெண்கள் 667 என மொத்தம் 1,544 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 217, சென்னையில் 194, ஈரோட்டில் 115, செங்கல்பட்டில் 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 16,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 19 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர்எண்ணிக்கை 35,055 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,416 பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x