Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்துக்கு 3 விருதுகள் :

ஏஐசிடிஇ சார்பில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விருது வழங்க அதை எஸ்ஆர்எம் துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்.

சென்னை

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் சார்பில், கடந்த 2020-ம் ஆண்டுக்கான நாட்டில் தூய்மையான மற்றும் மிடுக்கான சிறந்த வளாகமாக காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற விருதுவழங்கும் நிகழ்ச்சியில் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று அதற்கான விருதைவழங்க, எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்.

அதேபோல இந்தாண்டு ஆசிரியர் தின விழாவை ஒட்டி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் நல்லாசிரியர் விருதான விஸ்வேஸ்ராயா நல்லாசிரியர் விருது எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணினி பள்ளியின் நெட்வொர்க் மற்றும் கம்யூனிகேஷன் துறை உதவி பேராசிரியை பி.சுப்ரஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அபாயம் நிலவி வரும் சூழலில் மருத்துவ சேவையில் உள்ள தடைகளை களைவதற்கான தீர்வு காண்பதில் பேராசிரியர் சந்தீப் கே.லகிரா தலைமையில் மாணவர்கள் அடங்கிய குளோடெக் குழு (Clotech Team) உருவாக்கிய நிரமே (Niramay) என்றதீர்வு தேசிய அளவில் 2-வது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் எஸ்ஆர்எம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மத்திய அரசின் 3 விருதுகளை பெற்றமைக்காக அதன் வேந்தர், இணைவேந்தர்கள் மற்றும் நிர்வாககுழவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x