Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற - விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து :

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்சில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள இறகுப்பந்துப் போட்டியில் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார் ஆகியோர் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட இருக்கும் பிரமோத் பகத்துக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வால், தனது இரண்டாவது பதக்கத்தை வென்ற சிங்ராஜ் அதனாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பிரமோத் பகத், வெண்கலம் வென்ற மனோஜ் சர்காருக்கு பாராட்டுகள். இதேபோல, 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வால், வெள்ளி வென்ற சிங்ராஜ் அதானாவும் எனது பாராட்டுகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: துப்பாக்கிச் சுடும் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள மணீஷ் நர்வால், இரண்டாவது பதக்கம் வென்றுள்ள சிங்ராஜ் ஆகியோரது சாதனைப் பயணம் தொடரட்டும். அதேபோல, பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற பிரமோத் பகத், வெண்கலம் வென்ற மனோஜ் சர்க்காருக்கும் வாழ்த்துகள். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தியா பதக்கங்களை குவிப்பதில் மகிழ்ச்சி.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற வீரர்கள், தொடர்ந்து நடைபெறும் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். அதேபோல, பேட்மிண்டன் போட்டியில் வென்ற வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுத்தலுக்குரியவை.சோதனைகளை வென்று சாதனை படைத்த இருவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x