Published : 20 Aug 2021 06:41 AM
Last Updated : 20 Aug 2021 06:41 AM

7.44 டன் விதைகளை விற்பனை செய்ய தடை :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு தலைமையில் விதை ஆய்வாளர்கள் அடங்கிய பறக்கும் படையினர், விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். விதைகள் விற்பனை செய்வதற்கான உரிமம், இருப்பு புத்தகம், விற்பனை புத்தகம், தகவல் பலகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், சில விற்பனை நிலையங்களில் பயிர் பருவத்தை தெளிவாக குறிப்பிடாமலும், விதைப் பரிசோதனை முடிவுகள் மற்றும் வெளிமாநில விதை களுக்கான படிவம் ஆகியவை இல்லாமல் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் விவசாயி களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.6.47 லட்சம் மதிப்பிலான 7.44 டன் விதைகளை விற்பனை செய்ய தற்காலிகமாக தடை செய்து பறக்கும் படையினர் உத்தரவிட்டனர். மேலும், விதை வாங்கும் முன் பயிர் ரகம், பருவம் போன்ற அடிப்படை விவரங்களை தெரிந்து கொண்டும், வேளாண் துறை மற்றும் தோட்டக் கலைத்துறை அலு வலர்களிடம் ஆலோசனையை பெற்று, அவர்களின் பரிந்துரைப்படி விதைகளை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x