Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.கடகம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மனைவிவழி உறவினரால் சில காரியங்கள் நிறைவேறும்.கன்னி: யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.துலாம்: கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.விருச்சிகம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தனுசு: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சில காரியங்கள் இழுபறிக்குப் பின்னரே முடியும். மூத்த சகோதரரால் மனஸ்தாபம் ஏற்படக் கூடும்.கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.மீனம்: தடைகளைத் தாண்டி உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x