Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.488 குறைவு :

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.488 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நீட்டிப்பதால், அடிக்கடி ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.488 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆனது. கடந்த 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.728 குறைந்ததால், நகைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x