Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

கோயில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு : பக்தர்களுக்கு தடையால் களையிழந்த பேரூர் படித்துறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்பராம்பாளையம் ஆழியாற்றில் வழிபாட்டில் ஈடுபட்ட பொதுமக்கள். படம்: எஸ்.கோபு

கோவை

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, கோயில்களில் நேற்று பக்தர்கள் திரண்டனர். இருப்பினும் பேரூர் படித்துறைக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் ஏமாற்ற மடைந்தனர்.

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவையில் பெரியகடை வீதி கோனியம்மன் கோயில், உப்பிலி பாளையம் தண்டுமாரியம்மன் கோயில், ஆவாரம்பாளையம் பண்ணாரியம்மன் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்களில் நேற்று அதிகாலையிலேயே மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக, மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தர் களின் தரிசனத்துக்கு தடை விதிக் கப்பட்டது. பேரூர் படித்துறையில் புதுமண தம்பதிகள் தாலி மாற்றும் சடங்கு, திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாததால், பேரூர் படித்துறை பகுதி களையிழந்து காணப்பட்டது. இருப்பினும் சிலர் தடையை மீறி படித்துறை அருகே வந்து வழிபட்டனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியான நெல்லித்துறை அலங்கார வளைவு பக்தர்கள் செல்ல முடியாதவாறு மூடப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அலங்கார வளைவு முன்புள்ள அம்மன் உருவம் முன்பு தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

பொள்ளாச்சி

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஆழி யாற்றங்கரையில் பொதுமக்கள் படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர். ஆற்றில், குழந்தைகள், பெரிய வர்கள், விவசாயிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள் நீராடி, அங் குள்ள கோயில்களில் பொங்கல் வைத்து, பின்னர் பொரி,கடலை, அவல் உள்ளிட்டவைகளை ஆற்றில் தூவி வழிபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் கிடைக்கவேண்டும் என்றும், புதுமண தம்பதி வாழ்வில் நீடித்த ஆயுள், குழந்தை செல்வம், சுபிட்சம் வேண்டியும் வழிபாடு செய்தனர்’’என்றனர்.

கடந்த காலங்களில் ஆழியாற் றங்கரையில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். கரோனா அச்சம் காரணமாக இந்தாண்டு மிக குறைவானவர்களே ஆடிப் பெருக்கில் பங்கேற்றனர். இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x