Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

12-ம் வகுப்பு தேர்வில் வேல்ஸ் வித்யாஷ்ரம் சிறப்பிடம் : நிறுவனர் ஐசரி கணேஷ் பாராட்டு

சென்னை

சென்னை வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி 12-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்காக ஆசிரியர்கள், மாணவர்களை வேல்ஸ் கல்விக் குழுமங்களின் நிறுவனர் முனைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மிகவும் பாராட்டினார்.

பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற யுக்தி ராவ் (500-க்கு 498), அபிராமி (490), அனிருத் (488) ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பள்ளியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் ஆர்த்தி கணேஷ், பள்ளியில் அனைத்து மாணவர்களும் 60%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார். அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x