Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

கையடக்க கணினி ‘சிபியு’ வை உருவாக்கிய - திருவாரூர் மாணவனுக்கு முதல்வர் பாராட்டு :

கையடக்க கணினி மைய செயலாக்க கருவியை (சிபியு) உருவாக்கிய, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் எஸ்.எஸ்.மாதவ்வை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரைச் சேர்ந்த சேதுராசனின் மகன் எஸ்.எஸ்.மாதவ். 9-ம் வகுப்புபடிக்கும் இவர் கணினியில் மிகுந்தஆர்வம் கொண்டு, ஜாவா,பைதான், சி, சி , கோட்லின்ஆகிய கணினி மொழிகளை படித்துள்ளார். இவர் கரோனா ஊரடங்குகாலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கையடக்க கணினி மைய செயலாக்க கருவி(மினி சிபியு) கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்காக 2 ஆண்டுகள் கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து நேற்று தலைமைச் செயலகத்துக்கு மாதவ்வை நேரடியாக வரவழைத்து முதல்வர் பாராட்டினார். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக ‘டெராபைட் இந்தியா சிபியு மேனுபாக்சரிங் கம்பனி’ என்ற நிறுவனத்தை தொடங்கி, இணையதளம் வாயிலாக குறைந்த விலைக்கு விற்பனைசெய்து வரும் தகவலை கேட்டறிந்த முதல்வர் மாணவன் மாதவ்வை வாழ்த்தினார்.

மாதவ்வின் கண்டுபிடிப்பைபாராட்டிய முதல்வர், கணினிதொடர்பான மாணவனின் உயர்படிப்பு, ஆராய்ச்சிக்கும் தமிழகஅரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதிஅளித்தார். நிகழ்ச்சியில் மாதவ்வின் பெற்றோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x