Published : 28 Jul 2021 03:16 AM
Last Updated : 28 Jul 2021 03:16 AM

3,296 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு :

சென்னை

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 3,296ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் தொடர்பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

2011- 2012-ம் கல்வியாண்டில் 344 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கற்பித்தல் பணிக்காக 2,408 ஆசிரியர்கள், 344 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 888 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 3,296 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.

இவர்களுக்கான பணிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது. இந்த 3,296 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-24) தொடர் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.

அதைப் பரிசீலனை செய்து 3,296 பணியிடங்களுக்கு 29.02.2024 வரை 3 ஆண்டு களுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித் துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x