Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.கடகம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்து செல்லுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள்.சிம்மம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.கன்னி: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.விருச்சிகம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.தனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கும்பம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடிக்கும்.மீனம்: உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதரர் பாசமழை பொழிவார். என்றாலும் உங்களின் பேச்சால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் நிதானித்து செயல்படுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x