Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

சினேகன் - கன்னிகா ரவி 29-ல் திருமணம் : விஜய் ஆன்டனியின் 4 அவதாரம் :

பாடலாசிரியர் சினேகன், 2,500-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமிட்டி உறுப்பினராக உள்ளார். இசையருவி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகை கன்னிகா ரவி. சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண வீடு’ தொடர் வழியே பிரபலமானார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இவர் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. நண்பர்களாக அறிமுகமான சினேகன் - கன்னிகா ரவி இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் வரும் 29-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகர், தயாரிப்பாளராகவும் பல படங்களில் முத்திரை பதித்த விஜய் ஆன்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படம் வழியே இயக்குநராக களம் காண்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இது நீண்டகால கனவு. இந்த புதிய அவதாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக செலவில் இப்படம் உருவாகிறது. இதை இயக்குவதோடு, நாயகன், இசையமைப்பு, எடிட்டிங் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறேன். அடுத்தடுத்து ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x