Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

அரசு மருத்துவமனை மருத்துவர் என கூறி - நகைக்கடை உரிமையாளரிடம் நூதன முறையில் நகை திருட்டு :

சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் எனக் கூறி நகை வியாபாரியை நூதன முறையில் ஏமாற்றிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேளச்சேரியைச் சேர்ந்தவர் சக்திவேல். சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது நகைக்கடைக்கு டிப்டாப் உடையணிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் சஞ்ஜெய் என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். நகைக்கடை ஊழியர்களிடம் மனைவிக்கு நகை ஒன்றுவாங்க வேண்டும். என்ன மாடல் என தேர்வு செய்து வைத்து விட்டு தற்போது செல்கிறேன். நகையை மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்புங்கள், பணத்தை கொடுத்து விடுகிறேன் எனக் கூறிச் சென்றுள்ளார்.

இதை உண்மை என நம்பியசக்திவேல் டிப்டாப் உடையணிந்து வந்த நபர் தேர்வு செய்த நகையுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு வந்த டிப்டாப் ஆசாமி, நகையை பெற்றுக் கொண்டு அதைசெல்போனில் படம் பிடித்து மனைவிக்கு அனுப்ப வேண்டும் என கூறியவாறு நகையைபெற்றுக் கொண்டு அங்கிருந்து நழுவியுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்திவேல் இதுகுறித்து சென்னைஅரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x