Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

முதலீடுகளை ஈர்ப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உறுதி - 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : 49 திட்டங்களில் ரூ.28,508 கோடி முதலீடு 83,000 பேருக்கு வேலை

தமிழக தொழில் துறை சார்பில் ‘முதலீட் டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், 35 நிறுவனங்களு டன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

இதுதவிர மேலும் 9 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியதுடன், 5 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத் தார். இதன்படி மொத்தம் 49 திட்டங் களுக்கு ரூ.28,508 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதால் 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு தொழில் வழி காட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 முதல் வரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமி ழகத்தில் முதலீடு செய்யும் புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 5 நிறுவனங்களுக்கு முதல்வர் மானியம் வழங்கினார்.

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான விமானம், உதிரிபாகங்கள் உற்பத்தியை மேம்படுத்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் திறன்மிகு மையம் அமைக்க, முதல்வர் முன்னிலை யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பண்பாட் டின் முகவரியாக உள்ள தமிழகம், முத லீட்டாளர்களின் முகவரியாக மாற வேண் டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். கரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடி மட்டுமின்றி, நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டோம். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு எனது கோரிக்கையை ஏற்று 2 மாதத்தில் ரூ.489.78 கோடி நிதி திரண்டது.

உலகளவில் உற்பத்தித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க தொடங்கியுள்ளது. தெற்காசியாவிலேயே தொழில்புரி வதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் லட்சியம். வரும் 2030-க்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ கத்தை உருவாக்குவதே அரசின் குறிக் கோள். இதை நோக்கி பயணிக்க மேம் படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணைய தளம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ளவர்களுக்கு மட்டு மின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகளும் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதலாக 210 சேவை களும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த இணையதளத்தின் செயல்பாட்டை நானே நேரடியாக கண்காணிப்பேன். புதிய முதலீடுகளைப் பெருமளவு ஈர்க்க, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், ரூ.500 கோடியிலான தொழில் மேம்பாட்டு நிதியை உருவாக்க உத்தர விட்டுள்ளேன். முதல் கட்டமாக இதற்காக ரூ.95.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது உற்பத்தி, ஆட்டோமொபைல், ஜவுளி, காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருட்கள் உள்ளிட்டவைகளின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப்புரட்சி 4.0 என்ற நான்காம் தொழில்துறை புரட்சி நம் மாநிலத்துக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். மேலும் ஏற்றுமதிக் கொள்கை, மருந்து பொருட்கள் மற்றும் உயிரிநுட்பக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை வெளியிடவுள்ளோம்.

இன்று, புதிய தொழில் தொடங்க 35 நிறுவனங்கள் அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் ரூ.17,141 கோடி முதலீட்டுடன் 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங் கள் மூலம் ரூ.4,250 கோடி முதலீடு மற்றும் 21,630 பேருக்கு வேலையும் 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் ரூ.7,117 கோடி முதலீடு மற்றும் 6,798 பேருக்கு வேலையும் கிடைக்கும். மொத்தமாக, 49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஜவுளி, மருந்துப் பொருட்கள் ஆகிய பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், திருநெல்வேலி, தூத்துக் குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம் புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல் பட்டு, கடலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இவை அமைய உள்ளன.

அதிகப்படியான முதலீடுகளைத் தாருங்கள். அதன் மூலமாகத் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனிதவளத் துக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள். இவ் வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில்துறை செயலர் என்.முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்கு நர் பூஜாகுல்கர்ணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் சி.கே.ரங்க நாதன், டைம்லர் நிறுவன இந்திய பிரிவு தலைமை செயல் அலுவலர் கார்ல் அலெக்சாண்டர் செய்டல், டிசிஎஸ் முதன்மை செயல் அலுவலர் என்.கணபதி சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x